"என்னாது தடுப்பூசியே போடலையா?
அய்யய்யோ அது தெய்வ குத்தமாச்சே,
நோய்தாக்கிடுமே,
ஏன் இப்படி பச்ச குழந்தையை கொடுமை பண்றே??
உரம் போடாம விவசாயம் பண்றேனு சொல்றே அது பரவாயில்ல..
தடுப்பூசியில்லாம எப்படி வளக்க முடியும்?
கண்டகண்ட காய்ச்சல் எல்லாம்
இப்போ பரவுது,
எப்படி இந்த குழந்தை அதிலிருப்து தப்பிக்கும்.?
இப்படி ஒரு குழுமம்...
தடுப்பூசியில்லாம என் குழைந்தையா?
வாய்ப்பே இல்லை..
எத்தனை தடுப்பூசினு தொடர்ந்து படியுங்க...
நாராயணன் என்கிற 96 வயது
இளைஞர் (!) முதிர்ச்சியால்தான் இறந்தார்..(எனது தாத்தா)
அவருக்கு எந்த தடுப்பூசி போட்டு இருப்பாங்க?
அப்போ அவுங்க சாப்பிட்ட உணவு அப்படி ..
அதனால நோய் வந்திருக்காது.
ஆனா இப்போ அப்படியா னு கேட்பீங்க..
நல்லா புரியுதுங்க ..
இப்போதைக்கு என் மகளுக்கு பசித்த பிறகுதான் தாய் பால்..
இது நம் பாரம்பரிய முதல் தடுப்பூசி..
அதுக்கு பிறகு பிறந்த குழந்தையோட தொப்புளை ஒட்டி வெட்டி எடுத்து வச்சு இருக்கோம் அதை வீசாமல்...
சேகரித்து வைத்ததை பொடியாக தாயத்தில் அடைச்சு வச்சிருக்கோம்.. காலமெல்லாம் தாயோட கவசம் இதுதான்.
எப்போது எப்பேர்பட்ட தீராத நோய் வந்தாலும் தாயத்தை பிரித்து தாயின் தொப்புள் கொடி மீண்டும் காப்பாத்தும் என்பது நம்மளோட மரபு..
இதுக்காத்தான் அந்த தாயத்து..
அடுத்து கறந்த கழுதைப் பால் 10
மில்லி
இது அடுத்த தடுப்பூசி.(இன்னும் கழுதை பால் கிடைக்கவில்லை..)
மற்றவர்களை போல தங்கத்தில் மகளுக்கு வளையல் செய்து போட்டு பார்க்கனும்னு எங்களுக்கு ஆசை கிடையாது..
மகனும் நானும் சத்தி போனோம்..
சாலையோரத்தில் ஊசி பாசி விற்பவர்கள் கடை பரப்பி இருந்தாங்க..
இருபது ரூபாய் சொன்ன ரெண்டு வசம்பு வளையல் ..
முப்பது ரூபாயா கொடுத்து வாங்கினோம்..
செய்கூலி சேதாரம் இதுக்கு இல்லை என்பதால பத்து ரூபாய் சேர்த்தே கொடுத்தோம்..!
இந்த வசம்பை என் மகள் எச்சில்
ஒழுக்கி கடித்தும், நக்கிக்கொண்டே இருப்பது என் குழந்தையின் மூன்றாவது தடுப்பு ஊசி..
இன்னும் கொஞ்சம் பெரியவள் ஆகி பல் முளைக்கும் தருணத்தில்
ஈட்டியில் செய்த மரப்பாச்சி பொம்மை இருக்கு..
அதை வாயில் வைத்து கடித்து விளையாடினால் அதுவும் ஓர் தடுப்பூசி..
தவழ்ந்து நடக்க பழகும்போது மூன்று சக்கர நடை வண்டி வாங்கி கொடுத்து அதில் விழுந்து முட்டிக்கால் அடிப்பட்டும்
முட்டி போட்டு மண்ணில் நடந்து முட்டி
காப்பு காய்க்கும் போது அவளது
எலும்பு வலு பெற்று உறுதியாகும்.
இதுவும் ஓர் தடுப்பூசிதான்..
(எங்க வீட்டில் கிரேனேட் தளம் இல்லை என்பது அவளுக்கு போனஸ்)
அதுக்கு பிறகு நாட்டுமாட்டு பால் இருக்கு.
இது ஓர் வகைதடுப்பூசி..
எங்க தோட்டத்தில் கிடைக்கிற மூல
No comments:
Post a Comment